Monday, December 17, 2012

மார்கழித்திங்கள்

மார்கழித்திங்கள்
நேற்று தொடங்கியது மார்கழி மாதம். கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று காலையில் இருந்து தொல்லை செய்து எனக்கும் என் அம்மாவிற்கும் நடத்த சிறு பனிப்போரால் நிறுத்திவைக்கப்பட்டது.
போன வருடம் இதே மாதம் தான், எனக்கு மார்கழி குறித்து அறிமுகம். அப்பொழுது புதியதாய் பஞ்சசமஸ்தானம் வாங்கிய என் அம்மா ஹைதேராபாதிற்கு போன் செய்து, அதிகாலையில் குளித்து விட்டு திருப்பாவை படி என்றார்.
வழக்கம் போல், போங்கம்மா என்று சொல்லவந்த நான், ராபின் ஷர்மாவின் புத்தகத்தை அப்பொழுது தான் படித்து முடித்திருந்தேன்.
ராபினின் புத்தகத்தில் வந்த ஒரு நல்ல விஷயம் என் ஆள் மனதில் நன்றாக பதிந்தது, அது அதிகாலையில் எழுந்தால் நாள் முழுவதும் நன்றாக, சுறுசுறுப்பாக இருக்கலாம், வாழ்கையை நல்வழியில் செலுத்த காலையில் எழுவது மிக முக்கியம் என்று இருந்தது.
அதே நேரத்தில் மார்கழியும் சேர்த்து வந்ததால் ,சரி, இந்த ஒரு மாதம் எழுந்து தான் பார்ப்போமே, கடவுளையும் கும்பிட்டு, நல்ல பழக்கம் ஒன்றையும் உருவாகிக் கொள்ளலாம் என்பதே என் எண்ணம்.
எனது அறைதோழியர் மூவரும் நன்றாக தூங்கும் ரகம். அவர்களுக்கு அந்த ஒரு மாதமும், அடுத்து தொடர்ந்து வந்த மாதங்களும் கட்டம் சரியாயில்லை. :) நான் சிக்கிரம் எழுந்ததால் :)
எனக்கு என் அலுவலகத்தில் யு கே ஷிப்ட், அதாவது, மதியம் ஒரு மணிக்கு சென்று இரவு பத்து வரை பணி. டிராபிக் இல்லாததால் இது எனக்கும் விருப்பமான நேரமே. ஆனால் எங்கள் ஆபீசில், பத்து மணி என்றால் தொடர்ந்து பல சமயம்', நான் ஒரு மணி வரை இருக்க வேண்டிய நிர்பந்தம் இருந்திருக்கிறது.
அதுவும் மாத தொடக்கத்தில் நான் வீடு வர, அதிகாலை, நான்கு, ஐந்து என்று மணியாகும்.
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, குளித்துவிட்டு, ஒரு மூன்று நாள் , சிறு விடிவிளக்கை போட்டு திருப்பாவை படித்தேன். என் அறை தோழி, யு கேர்ள், டோன்ட் டிஸ்டர்ப் எர்லி மார்னிங் யா" என்று  எரிச்சல் கீதம் பாடியதால், சரி ஹாஸ்டலின் வெளி அறையில் அமர்ந்து படிக்கலாமே என்று தொடர்ந்தேன்.
என் அறை கப்போர்டில் பெருமாள் படத்தை வைத்தால், முன்னால் கடவுள் இல்லாதது போல் இருந்தது, சரி, வெளியில் சூரியனின் முன் நின்று படிப்போமே என்று நித்தமும் சூர்ய உதயத்தில் திருப்பாவை படித்தேன்.
அந்த குளிரில் நின்று வெடவெடத்தல் பரமசுகம் . இருளும், வெளிச்சமும் கலந்து கலவா அந்த காலை வேளை- மயக்கம்
ஸ்ரீ ராமரே சூரியனை தான் குலக்கடவுளாக தொழுதார் என்பது எனக்கு நானே கொடுத்துக்கொண்ட சமாதானம். ;) சூரியனின் முன் திருப்பாவை தொடர்ந்தது
இதில் என்ன விசேஷம் என்றால், மார்கழியை விட, ஏன் திருப்பாவையை விட ,என்னை கவர்ந்தது அதிகாலை சூரிய உதயம்.
வாழ்கையில் எனக்கு நேர்ந்த மிக பெரிய சந்தோசம் அது, ஆந்திர தேசத்தில், என்னை நானே பரவசப்படுத்தி கொண்ட நாட்கள் அவை, அதிலும், இங்கே, தமிழகத்தில் போல் சுள்ளென்று உயராமல், ஒரு வித மந்தமான வெளிச்சத்திலேயே சூரியன் உதயம் ஆவதை பார்க்க கோடி கண் வேண்டும்.
எனக்கு நடந்த நல்ல விஷயங்களை, பலரிடம் பகிர்ந்து கொள்ளுவது என் வழக்கம், என் தோழிகளிடம் இது பற்றி சொன்னேன், எல்லோரும் "அப்டியா, என்ஜாய் " என்றார்களே தவிர, சூரியனை என் போல் காதலிக்க எழ வில்லை.
மனோத்தத்துவமா இல்லை உண்மையா தெரியாது, என்னுடைய வாழ்கையில் சிறந்த நாட்கள் அவை.அதிகாலை விழித்து, கடவுளை தொழ கூட வேண்டாம், அந்த அமைதியை உணர்ந்தாலே போதும்.
ஒரு வருடம் சென்றது போலவே இல்லை, மறுபடியும் மார்கழி, ஆனால் மதுரையில், நான் மாட கூடலில், என் கூடல் அழகனின் முன்னிலையில் இன்று, அதிகாலை திரும்பவும் திவ்ய தரிசனம்.
கடவுளை, நம்புவதும், நம்பாமல் இருத்தலும், மனிதனுடைய விருப்பம், ஆனால், இயற்கையை காதலிக்க கற்றுகொள்ளுவது, பெரிய சந்தோசங்களை தேடிகொடுக்கும்.அந்த காலத்தில் நம் நன்மைக்காகவே பலவிஷயங்களை செய்தும், சொல்லியும் சென்று இருக்கிறார்கள், ஆனால் பலர் விஞ்ஞானம் என்கிற பெயரில் உதாசீனப்படுத்துவது வருத்தமே
மறுபடியும் ஒரு மாதம், திருப்பாவையும், வாரணம் ஆயிரமும், சூரியனோடு, கொஞ்சம் தமிழையும், காதலையும் கற்றுக்கொள்ள உதவும் :) நன்றி கோதை நாச்சியார் ஆண்டாளுக்கு .
மகிழ்வான மார்கழிக்கு வாழ்த்துக்கள்
மதுர பொண்ணு

8 comments:

  1. Nandrigal iruvarukkum @king viswa- u r my first follower :) so thanks @bala, nandri bala, padichitu comment potadhukku :))

    ReplyDelete
  2. தமிழில் எழுத ஆரம்பித்தமைக்கு வாழ்த்துகள். என்னளவில் ஹைதராபாத் மட்டுமல்ல, அதிகாலையில் எல்லா நகரங்களுமே அழகுதான். முக்கியமா நீங்க எழுத்துப்பிழைகளையும் சந்திப்பிழைகளையும் சரி செய்யணும்.
    // பணிப்போரால் // பனிப்போரால் தான் சரி.
    // நல் வலியில்செலுத்த // நல்வழியில் செலுத்த
    அப்புறமா கூடல் என்ற வார்த்தைக்கு வில்லங்கமான அர்த்தம் உண்டு. ஒருவேள ஊடல் சொல்ல வந்தீங்க போல. :-)
    தலைப்பில் கூட சந்திப்பிழை. மார்கழித்திங்கள் தான் சரி.
    சரி சரி. கொஞ்சம் ஓவராவே போயிட்டேன். திட்டக்கூடாது. எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். :-)))

    ReplyDelete
  3. இல்லை அது கூடல் தான், மதுரைக்கு கூடல் மாநகரம் அப்டின்னு தான் சொல்லுவாங்க, நீங்க சொல்றது சரி தான், தமிழில் புது முயற்சி, கொஞ்சம் கொஞ்சமா திருதிக்கறேன் :) இதுல கூட எழுத்துப்பிழை இருக்கு, பட் நன்றி, சொன்னதுக்கு

    ReplyDelete
    Replies
    1. இப்ப புரிஞ்சது. :-))

      Delete
  4. மதுரை பொண்ணு னு பெயரை பார்த்ததும்.. என் ஊரை பற்றி நிறைய இருக்கும் என்று எதிர் பார்த்து வந்தேன்... ஏமாற்றமாகிவிட்டது. இருந்தாலும் ஒரு கட்டுரையே நீங்கள் இனி நிறைய எழுத்துவீர்கள் என கூறுகிறது.. முடிந்தால் விடி காலை 6:30 கு முன் மதுரை மீனாக்ஷி யை காண செல்லுங்கள்.. உங்களுக்கு அங்கே ரசிக்க நிறைய இருக்கு..

    ReplyDelete
  5. மதுரையில் பிறந்தப் பெண்ணிற்கு மீனாக்ஷி அம்மனை பற்றி தெரியாதா? கண்டிப்பாக எழுதுவேன், நன்றி நேரம் எடுத்து படித்தமைக்கு! நான் ஆங்கிலத்தில் பதிவுகள் எழுதுபவள், தமிழில் இது எனக்கு புது களம்! ஆனால் கோவில்களை பற்றி மட்டும் இருக்காது! எல்லா விஷயங்களையும் யோசிக்க வைக்க கூடிய அளவில் எழுதுவது பிடிக்கும்!தொடர்ந்து படியுங்கள்!தற்பொழுது என் ஆங்கில ப்ளாக் லிங்க் இங்கே-- இங்கேயும் உங்கள் விமர்சனங்கள் வரவேற்க்கப்படுகின்றன
    http://prathi-surendran.blogspot.in/

    ReplyDelete