Saturday, January 26, 2013

கல்கி & குங்குமம்- விஸ்வருபம்- தமிழ்

தமிழை தேடிக் கொண்டே இருக்கிறேன், கொஞ்சம் குற்றஉணர்ச்சியோடு. இத்தனை நாட்களாக இல்லாத காதல் ஏன் என் மொழியின் மீது திரும்பவும், என்று....

அப்பொழுது தான் உணர்ந்தேன் என்றுமே அதீதமாய் காதலித்திருக்கிறேன் என் மொழியை

ட்விட்டறுக்கு நான் மிகவும் கடமை பட்டிருக்கிறேன், பலரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு இங்கு கிடைக்கிறது, கருத்துப்பரிமாற்றம் நடக்கிறது, சிலர், நாம் பேசுவதை ஒப்புக்கொள்வார்கள், சிலர் மாற்றுக்கருத்து சொல்வார்கள், இரண்டுமே சுவாரஸ்யம் தான்...

பலத்தரப்பட்ட கலைஞர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இணையம கொடுத்துள்ளது.சிலரின் அறிவைக் கண்டு வியப்பு, ஆச்சர்யம், கொஞ்சம் பொறாமையும் கூட, நான் விருதாவாக கழித்த காலங்களை இவர்கள் உபயோகமாக கழித்து அறிவை வளர்த்துக் கொண்டார்களே என்று.

போட்டிக்கு நானும் தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

இந்த வருடம் மிகவும் இனிமையாக ஆரம்பித்தது. என் எழுத்து, என் கீச்சு,  முதல் முறையாக, குங்குமம் இதழிலில் வருடத்தின் முதல் நாள் வந்தது, என் பெயரை அச்சில் பார்த்து நான் சந்தோசம் கொள்ளாவிடில் நான் என்ன பெண்?!

உண்மையில், ஆத்மார்த்தமான சந்தோசம், திருப்தி!

இந்த வார, கல்கியில் என்னுடைய கீச்சு பிரசுரமாகியிருக்கிறது. கல்கி போன்ற தரம் உள்ள ஒரு இதழில், ஒரு சிறு பகுதியில் வந்தாலும் நான் மகிழ்ந்தது உண்மை...

இதை மேன்மேலும் வளர்க்க வேண்டும், அறிவை விருத்தி செய்ய வேண்டும் என்று தீராத, ஆவல் மனதில்.

பலரை என் எழுத்தின் மூலமாக அமைதி படுத்தும் முன், என்னை என் எழுத்தின் மூலமாக திருப்தி படுத்துவது கடினமாக இருக்கிறது. முயல்கிறேன்.

விஸ்வருபமே இந்த வார ட்விட்டரை ஆக்ரமித்தது, சில விஷயங்கள் எனக்கு புரியவில்லை, முதலில், இதை ஒரு படம் என்று பார்க்காமல், மதம் என்று பார்ப்பது சரியல்ல..

அதுவும், நாத்திகனான கமல், ஒரு மதத்தை அவமதித்து படம் எடுப்பது சாத்தியமில்லை.

ரஜினி அவர்களுக்கு சாதகமாக அமைந்த புகழ், கமல் போன்ற கலைஞனுக்குப் பாதகமாக அமைந்திருக்கிறது! சோகமான விஷயம்!

தமிழர்கள், தமிழனுக்கு உதவுவதில்லை என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. அதன் உதாரணமே, தமிழகத்தில், ரஜினி முன்னணி நடிகராகவும், கமல் அவருக்கு அடுத்து வரும் நடிகராகவும் இருப்பது!

கன்னடதிலோ, தெலுகிலோ, இல்லை, மலையாளத்திலோ, ஒரு தமிழனை முன்னணி நடிகராக ஏற்றுக்கொள்ள சொல்லுங்கள் பார்க்கலாம்! அவர்கள், நம்மை போல் அதிகம் மொழிக் குறித்து பேசுவதில்லை, தங்கள் மொழியை,அவமதிப்பதில்லை

ஆனால், நாம் மொழி, மொழி என்று குதித்து விட்டு, கடைசியில், பிற மொழியினரை தலையில் தூக்கி வைத்து ஆடுவோம். இது சமீபமாக வரும், நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் பொருந்தும்.

இதை நான் மன வலியோடு தான் எழுதுகிறேன், இங்கே தமிழ் என் மூச்சு என்று பேசி ஓய்பவர்கள், பெரும்பாலும், தமிழை மதிக்காதவர்களாகத் தான் இருக்கிறார்கள்.

ஒரு தமிழனாக, கமலின் திறமை மேல் அதிகம் மதிப்பு உண்டு.  ஆனால், தமிழக அரசு, விஸ்வருப பட விஷயத்தை,  தேவையில்லாமல், ஊதி பெரிதாக்கி விட்டார்கள் என்பதே நிஜம்.

அது கமலுக்கு நெகடிவ் புகழை தேடிக் கொடுத்தாலும் அது தான் நடந்திருக்கிறது.... கமலுக்கு இது புதிது அல்ல, மீண்டு வருவார் என்று நம்புவோம், காத்திருப்போம்.

இன்று குடியரசு தினம், எனக்கு கொண்டாட மனதில்லை, ஒவ்வொரு இருபத்திரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு பெண் இந்நாட்டில் பலாத்காரபடுத்தப் படுகிறாள்! கடந்த ஆண்டு, கொடூரமாக இறந்த ஜோதியை நாம் அதற்குள் மறந்து விட்டோம்!

காலம் வேகமாக ஓடுகிறது, காலத்திற்கு ஏற்ப, மனிதனும் ஓடிக் கொண்டிருக்கிறான், அந்த வேகத்தில், பல கொடூரங்கள், ஒதுக்கப்படுகின்றன, மறக்கப்படுகின்றன...

நம் நாட்டைப் பொறுத்த வரை, பெண்கள் மதிக்கப் படுவதில்லை, சீரழிக்கப் படுகிறார்கள்  என்பதை பட்டவர்த்தமாக உணர்ந்தேன்
அது வரையில் ---


மதுர பொண்ணு

6 comments:

 1. தங்களின் தமிழ்-ஆங்கிலம் பதிவுகள் இரண்டுமே நன்று எனது அன்பு வேண்டுகோள் ...வாரப்பத்திரிகைகளில் வருகிறதே என்ற மாயையில்....பார்த்து கீச்சவேண்டுகிறேன் ..அவைகள் பணத்திற்க்காவே நடத்தப்படுகின்றன ..பண்பு தெரியாது அவைகளுக்கு ..நானும் மதுரையில் வளர்ந்தவன் ..மதுரையில் படித்தவன் என்பதினாலே இந்த வேண்டுகோள்

  ReplyDelete
 2. நன்றி பரிதி அவர்களுக்கு, என் நலம் வேண்டி நீங்கள் சொல்லுவதை, கண்டிப்பாக மனதில் இருத்திக் கொண்டேன், கவனத்துடன் இனி இருக்கிறேன் , நீங்கள் சொன்னதின அர்த்தம் புரிந்தது, அதை எடுத்து சொன்னதற்கு நன்றி! மதுரையில் வாழ்ந்ததாக நீங்க சொன்னது இன்னும் மகிழ்ச்சி :-))

  ReplyDelete
 3. வலைப்பூவுலகிற்கு தங்களை வரவேற்கிறேன்... இது ட்விட்டரை விட சுவாரஸ்ய பூமி. தொடர்ந்து எழுதவும். சில பதிவுகள் எழுதிவிட்டு சோர்வடைந்துவிட வேண்டாம்.

  ReplyDelete
 4. நம்முடைய சுய எண்ணங்களை பிரதிபலித்தாலே போதுமானது Prathi Surendran

  ReplyDelete
  Replies
  1. இதை எவ்வாறாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று புரியவில்லை, நீங்க ஆதரித்துப் பேசுகிறீர்கள, இல்லையென்றால், முரண கருத்து சொல்லுகிறீர்களா, என்பதை அறிந்தாலே நான் கமென்ட் செய்ய முடியும் :-))இங்கே எழுதிய அனைத்தும் என் சுய கருத்துகளே ,,,

   Delete
 5. மொழி குறித்த மொழிகள் அழகு... ஒரு தலைப்புக்குள் ஒடுங்காமல் பலதரப்பட்ட விஷயங்களை எழுதும் நடையும் நன்றாக உள்ளது.. :) நான் அதை பழகணும். தொடர்ந்து எழுதுங்கள்.. :)

  ReplyDelete