இது போன்ற சமூக விஷயங்களில் விஷயம் தெரியாமல் பேசக் கூடாது என்பதால் , பொதுவாக நான் இதைக் குறித்து எழுதுவது இல்லை!
ஆனால் காலையில் இருந்து ஏற்கனவே மனம் சரியில்லாமல் இருந்த எனக்கு, இளவரசனின் மரணம் அதீத கோபத்தை அளிப்பதாய் தருவதாய் அமைந்துள்ளது!
அவளும் சின்னப் பெண், அவனும் சின்னவனே! இருவரும் காதலித்து, அதனால் அவளின் அப்பா கொலை செய்யப் பட்டு, இன்று காதலனும் கொலையாகி இருக்கிறான்! அவள் கண்டது தான் என்ன? அல்லது அவன் கண்டது தான் என்ன?
இணையத்தில் நாம் பலரும் பேசுகிறோம், எத்தனை நாள்? இன்னும் ஒரு வாரம்?
ஒரு RIP போட்டு விட்டு நாம் மானாட மயிலாட பார்க்க சென்று விடுவோம். என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்!
ஆனால் மாற்றம்?
அது சமூகத்தின் வேலை அல்லவா??? நம் மனப்பான்மை இது தான், இல்லையா? நாம் தான் சமூகம் என்பதை பலர் உணர்வதே இல்லை!
இங்கே முகப் புத்தகத்தில், ட்விட்டரில் பலரும் அப்பெண்ணை திட்டுகிறார்கள், யோக்கியதை இல்லாத ஆண்களே, பெண்களை போகப் பொருளாக மட்டுமே பார்க்கும் உங்களுக்கு ஒரு பெண்ணின் கோழைத்தனத்தை குறை சொல்ல அருகதை இல்லை! இங்கே ஒரு லைக் வேண்டும் என்பதற்காக ஊரார் வீட்டுப் பிள்ளையை குறை சொல்லும் விடியா மூஞ்சிகள் உங்கள் வாழ்க்கையை மட்டும் பார்ப்பது நல்லது
இது தற்கொலை என்று என்னால் ஒத்துக்கொள்ளமுடியாது! இங்கே யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை! நேற்று அவள் சொன்ன வார்த்தை தாங்காமல் இன்று இவன் செத்துப் போயிருக்கிறான் என்பதற்காக திட்டமிட்டு நடந்த சதி!
உண்மை எல்லோருக்கும் தெரியும், ஆனால் நியாயம் வாங்கும் வழி எங்களுக்கு தெரியாது!
இணையத்தில் பொங்கும் நம்மில் பலருக்கும் தெருவில் இறங்கி போராடும் தைரியம் இல்லையல்லவா? அங்கே அரசியல்வாதிகள் முன்பு நாம் கேவலமாக தோற்றுப் போகிறோம்!
இன்னும் தோற்கக் போகிறோம்! ஆனால்இளவரசன் கொலையை நிஜத்தில் தடுத்திருக்கலாம்! குறைந்தது இந்த ஒரு மாதமேனும் அவனுடன் யாராவது ஒருவர் இருந்திருக்கலாம்! அங்கே தலித் இயக்கங்களும் தோற்று விட்டன! நம்மைப் போல தூரத்தில் இருந்து வேடிக்கை மட்டும் பார்த்து சவுண்ட் விடும் நபர்களும் தோற்றுவிட்டோம்!
கண்களில் கண்ணீர்! ஜாதியின் பேயாட்டம் குறைய நல்ல தலைவன் வேண்டும்! நல்ல தலைவன் இல்லாத நாடு நாசமாய் போகும்! தமிழகமும், இந்தியாவும் நாசமாய் போய்க் கொண்டிருக்கிறது!
Sure it will be murder i dnt think its suicide.... every one sees castiscm not only oldies we youngsters to.... it will continue till we change
ReplyDelete:(