Saturday, July 6, 2013

நிஜமாய் கிறுக்கல்கள் :)

நீயாய் நானிருக்க ஒரே ஒரு விதிமுறை உனக்கு-என்றேன்டும் வேண்டும் உன் புன்னகை!

ஆவாயோ கணவனாய் தெரியாது- உன் வலியில் வழியில்
மறப்பாயோ என் நெஞ்சார்ந்த முத்தத்தை...

கற்றுக் கொள்கிறேன் கவிதை- உனக்கே உனக்காக
ம், பிடிக்கவில்லையடா- நீ பேசேன் கவிதையாய்

முதுகில் குத்தாதே- குருகுருக்கிறதே
பார்வையை விலக்கிக் கொள்

விரைந்து வா- உனக்காக புன்னகை காத்திருக்கிறது

கலவியோ?  காதலோ? உணர்ந்தேனோ?  அறியேன்!
கவிதையாய் ஒரு முத்தம்- மீண்டும்

வித்தைப் பேச்சு எதற்கு- உன் - போடி லூசில்
நான் மயங்கிட காத்திருக்கையில்

தொலைப்பதற்க்காக பிறந்தேனோ- உன்னில் என்னை

விவரமாய் கேட்கிறாய்- ஏன் காதலித்தாய் என்று
என் சொல்வேன்..
முன் தலையின் ஓரத்தில் கரம் பதித்து கொட்டோன்று வைத்தாய்
அதனால் எனவா?

என் பேச்சின் மரணம் உன் முன் மட்டுமே
மரணம் உனக்கு சொல்லும் விஷயமும் பெண்மை மட்டுமே

எங்கோ தூரத்தில் நீ- நினைவில் இருக்கிறேனா?
தெரியாது!
மணல் போல் ஆனது நம் காதல்- காற்றில் தூசியாய்
உறுத்துவது என்னவோ என் கண்ணோரங்களில் தான்!

7 comments:

  1. வலியில் வழியில் மறப்பாயோ வார்த்தைகள் மிகவும் ஆழம்...


    வாழ்த்துக்கள்..

    அருமை.. ;-))))


    அன்புடன் கிரேசி கோபால்

    ReplyDelete
  2. ஹா...ஹா...ஹைக்கூ....? அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி பரிதி சார் :-))

      Delete
  3. கவிதை அருமை.

    எனக்கு பிடித்த வரிகள்,

    //என் பேச்சின் மரணம் உன் முன் மட்டுமே
    மரணம் உனக்கு சொல்லும் விஷயமும் பெண்மை மட்டுமே//

    //மணல் போல் ஆனது நம் காதல்- காற்றில் தூசியாய்
    உறுத்துவது என்னவோ என் கண்ணோரங்களில் தான்//

    ReplyDelete
  4. இதெல்லாம் போஸ்ட் பண்ண உனக்கு தைரியம் வேற வருதான்னு கேக்குற மாதிரி இருக்கு உங்க ஸ்மிலீ :-)) ஹஹாஹ்

    ReplyDelete
  5. மணல் போல் ஆனது நம் காதல்- காற்றில் தூசியாய்
    உறுத்துவது என்னவோ என் கண்ணோரங்களில் தான்

    அருமை அருமை

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete